விழுப்புரம்: விழுப்புரம் பீமநாயக்கன் தோப்பு முத்துமாரியம்மன் கோவிலில், 92ம் ஆண்டு பிரம்மோற்சவம் நடந்தது. இதற்கான விழா கடந்த 20ம் தேதி துவங்கியது. நேற்று முன் தினம் முத்துமாரியம்மன் நாக வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சிம்மவாகனம், யானை, ரிஷபம், குதிரை வாகனங்களில் அம்மன் அருள்பாலித்தார்.
வரும் 28ம் தேதி காலை 8:00 மணிக்கு, பக்தர்கள் அலகு குத்துதல், மதியம் 2:00 மணிக்கு ரத உற்சவம், மாலை 6:00 மணிக்கு தொட்டி செடல், 31ம் தேதி அம்மன் ஊஞ்சல் உற்சவம், செப்., 4ம் தேதி முத்து பல்லக்கும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.