பதிவு செய்த நாள்
25
ஆக
2015
12:08
பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில், ஆவணிபிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கி செப்.,2 வரை நடக்கிறது.
பெருமாள் தினமும் காலை 7 மணிக்கு மேல் சப்பரத்தில் வீதிஉலா வருதல், இரவு 7 மணிக்குமேல் அனுமான், கருடர் போன்ற வாகனங்களில் திருவுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. செப்.,1ல் காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேரோட்ட விழா நடைபெறவுள்ளது.
விழாவின் முதல் நாளான நேற்று காலை 6.50 மணிக்கு அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனை செய்து, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.