பாகூர்: பாகூரில் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நாளை 26ம் நடக்கிறது. பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணி நடந்து வந்தது.
பணி முழுமை பெற்று நாளை 26ம் வெள்ளோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு காலை 9.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை நடக்கிறது. 9.30 மணிக்கு கரிகோலம் வீதியுலா நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு சிவபார்வதி கலச பூஜை நடக்கிறது.
தொடர்ந்து மகா தீபாரதனை நடக்கிறது. 27ம் தேதி காலை 5.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 8.15 மணிக்கு யாத்ர தானம், கடம் புறப்பாடும் நடக்கிறது. 8.30 மணிக்கு புதிய தேருக்கு மகா அபிஷேகம், மகா சாந்தி விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர், தேர் திருப்பணிக் குழுவினர், ஆலய அர்ச்சர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.