பதிவு செய்த நாள்
25
ஆக
2015
12:08
பெசன்ட்நகர்: பெசன்ட்நகர், அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா, வரும் 29ம் தேதி துவங்கி, 11 நாட்கள் நடைபெறுகிறது.
பெசன்ட்நகர், அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா, வரும், 29ம் தேதி முதல், அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. 29ம் தேதி, மாலை 5:45 மணிக்கு, தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், கொடியேற்றம் மற்றும் சிறப்பு கூட்டு திருப்பலியுடன் திருவிழா துவங்குகிறது.
திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாளும், தமிழ், ஆங்கிலம் மொழிகளில் திருப்பலி நடைபெறும். 7ம் தேதி, மாலை 5:30 மணிக்கு, செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமையில், அன்னையில் ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து, பெசன்ட் நகருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவில், கடற்கரை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில், அதிக அளவில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.