பதிவு செய்த நாள்
26
ஆக
2015
12:08
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ராசக்காபாளையம் மாகாளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் ராசக்காபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு நாளை கும்பாபிேஷகம் நடத்தப்படுகிறது. விழாவை முன்னிட்டு நேற்று காலை, 7:30 மணிக்கு மகா கணபதி ேஹாமம், நவக்கிரஹ ேஹாமமும், மாலை, 5:00 மணிக்கு விக்னேஸ்வரல பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம் உள்ளிட்ட சடங்குகளும், இரவு, 8:00 மணிக்கு முதற்கால வேள்வி, திரவியாகுதி, பூர்ணாகுதி நடந்தன. இன்று காலை, 7:00 மணிக்கு விசேஷ சாந்தி, 9:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வியும் நடக்கிறது. நாளை காலை, 6:00 மணிக்கு நான்காம் கால வேள்வி, நாடி சந்தானம், 9:00 மணிக்கு யாத்ரா தானம், கலசம் புறப்பாடு, 9:30 முதல் 10:30 மணிக்குள் மகா கணபதி, சுப்பிரமணியர், கோபுர கலசங்கள் மற்றும் மாகாளியம்மன் மகா கும்பாபிேஷக விழா நடைபெறும். தொடர்ந்து மகா அபிேஷகம், தச தரிசனம், அன்னதானம் நடைபெற உள்ளது. இத்தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.