வில்வம், கடம்பம், வன்னி, கொன்றை ஆகிய விருட்சங்கள் சிவாலயங்களில் பிரதான தலவிருட்சமாக இருக்கும். அரிதாக வேலூர் மாவட்டம் திருவல்லம், திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் ஆகிய கோயில்களில் பலாமரம் தல விருட்சமாக இருக்கிறது. குற்றாலத்தில் வேதங்களே பலா மரத்தின் வடிவில் வந்து சிவனை வழிபடுவதாக ஐதீகம். இங்கு சிவனை வழிபடுபவர்கள் இம்மரத்தையும் வழிபட்டு செல்கின்றனர். தேவாரத்தில் சிவனைப் பற்றித்தான் அப்பர், சுந்தரர் பதிகம் பாடியுள்ளனர். ஆனால், திருஞானசம்பந்தர் குற்றாலநாதர் கோயில் பற்றி பாடும்போது, இம்மரத்தை குறித்தும் பதிகம் பாடியிருக்கிறார்.