பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் சிவன்படத்தெருவில் உள்ள ஸ்ரீ ஐயனார் கோவிலில் இன்று 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி கடந்த 25ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் மற்றும் முதல் கால யாக சாலை பூஜை, தீபாராதனையும், 26ம் தேதி 2 மற்றும் 3ம் கால யாக சாலை பூஜையும் நடந்தது. கும்பாபிஷேக தினமான இன்று (27ம் தேதி) நான்காம் கால யாக சாலை பூஜை, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருப் பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.