திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே சிவன் கோவிலில் நந்திக்கு முன்மண்டபம் கட்டுவதற்கான பணி துவக்கவிழா நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த தென்மங்கலம் புவனேஸ்வரி சமேத சீதப்பட்டீஸ்வரர் கோவில் கருவறையிலுள்ள, லிங்கம் 16 பட்டை கொண்ட சிறப்புடையது. இக்கோவிலில் நன்கொடையாளர்கள் உதவியுடன், 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நந்திக்கு முன், மண்டபம் கட்டுவதற்கான பணிகள் துவக்க விழா நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு மேலமங்கலம் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் பூஜைகள் செய்து வேலையை துவக்கி வைத்தார். மார்த்தாண்டன், ஜனார்த்தனன், ஆசைத்தம்பி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.