பதிவு செய்த நாள்
28
ஆக
2015
11:08
செஞ்சி: வல்லம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா, வல்லத்தில் உள்ள சித்தி விநாயகர், ஞானபுரீஸ்வரர், ஸ்ரீதேவி பார்வதி, நவக்கிரகங்கள், முத்துமாரியம்மன், கெங்கையம்மன், சப்தமாதாக்கள் மற்றும் மேல்மருவத்துõர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற கோவில்களுக்கு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு 26ம் தேதி காலை 9:00 மணிக்கு சக்தி கொடியேற்றுதலும், முதல் கால யாகசாலை பூஜையும், மாலை 5:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், மாலை 6:00 மணிக்கு கோபுர கலசம், தெய்வ சிலைகள், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது.அதனை தொடர்ந்து சித்தி விநாயகர், முத்துமாரிய ம்மன், ஞானபுரீஸ்வரர் கோவில் மற்றும் கெங்கையம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற இளைஞர் அணி தலைவர் செந்தில்குமார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். சேர்மன்கள் அண்ணாதுரை, ராமமூர்த்தி, பரிமளா பன்னீர் செல்வம், விழா குழு தலைவர் பாண்டுரங்கன், ராமலிங்கம், அருள், மாவட்ட கவுன்சிலர் மஞ்சுளா குமார், ஊராட்சி தலைவர் விநாயகம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.