பதிவு செய்த நாள்
28
ஆக
2015
12:08
புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில், நாளை ௨௯ம் தேதி, யஜூர் வேத ஆவணி அவிட்டத்தையொட்டி பூணுால் மாற்ற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில், நாளை 29ம் தேதி யஜூர் வேத, ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு காலை 5:00 மணி முதல் பகல் 12:00 வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குழுக்களாக பூணுால் அணிய, புதுச்சேரி பிராமண சங்கம் மற்றும் சாய் சங்கர பக்த சபா சார்பில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பின், 30ம் தேதி, காலை 6:00 மணி முதல் 8:00 வரை, உலக நன்மை ÷ வண்டி சமஷ்டி காயத்ரி ஜபம் நடக்கிறது. மேலும் சாமவேத ஆவணி அவிட்டம் வரும் செப்., 15ம் தேதியும், ருக்வேத ஆவணி அவிட்டம் செப்., 24ம் தேதியும் பூணுால் மாற்றலாம். அனைத்து வேதத்தினருக்கும் வரும் 30ம் தேதி காயத்ரி ஜபம் அனுசரிக்கலாம். மேலும் விபரங்களை அறிய, ராஜா சாஸ்திரிகளை, 98423 29770, 98423 27791 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.