கரூர்: கரூர் அருகே 5 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த கே.பேட்டையைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் தனது வயலில் விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக குழி தோண்டியுள்ளார். அப்போது 5 கிலோ எடை கொண்ட, கையில் விளக்கேந்திய பெண் உருவில் ஐம்பொன் சிலை ஒன்று கிடைத்துள்ளது. இதையடுத்து, அதை குளித்தலை தாசில்தார் நேருவிடம் பெரியசாமி ஒப்படைத்தார். பின்னர் சிலை மாவட்ட கலெக்டர் ÷ஷாபனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை அரசு அருங்காட்சியத்தில் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.