திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களால் பாழாகும் கல் திட்டுகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2011 12:07
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள், கல் திட்டுகளில் பக்தர்கள் தீபம் ஏற்றுவதால் பாழாகிறது. பக்தர்கள் தங்களது கோரிக்கை நிறைவேற்ற, கோயிலிலுக்குள் எண்ணெய் மற்றும் நெய் தீபங்கள் ஏற்றுகின்றனர். இதற்காக நெய் தீபம் விற்பனை செய்ய தனியார் உரிமம் பெற்று, கோயிலுக்குள் சில இடங்களில் கடைகள் நடத்துகின்றனர். இந்த கடைகளிலும், வெளியல் இருந்தும் எண்ணெய், நெய் தீபங்களை பக்தர்கள் வாங்குகின்றனர். திருவாட்சி மண்டபத்தின் நுழைவு பகுதியில் உள்ள கடை அருகே, தீபம் ஏற்ற அமைக்கப்பட்டுள்ள இரும்பு மேஜையில் சில பக்தர்கள் தீபம் ஏற்றுகின்றனர். திருவாட்சி மண்டபத்தில் உள்ள ஆறுகால் பீட மண்டபத்தின் அடிப்பகுதியில் உள்ள கருங்கல் திட்டுகளில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதுதவிர கோயிலுக்குள் உள்ள பல சுவாமிகளின் முன் உள்ள கற்கலில் தீபம் ஏற்றுகின்றனர். இதனால் அந்த கல்சுவர்களில் எண்ணெய் வடிந்து பாழாகி வருகிறது. ஜூன் 6ல் நடந்த கும்பாபிஷேகத்திற்காக கோயிலுக்குள் அனைத்து கல்தூண்கள், சுவர்கள் சுத்தம் செய்யப்பட்டு, தூய்மையாக இருந்தது. தற்போது பக்தர்கள் தீபம் ஏற்றி பாழாக்கி வருகின்றனர். சுவாமிகள்முன், தீபம் ஏற்ற, குறிப்பிட்ட இடங்களில் இரும்பு மேஜைகள் அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், கண்ட இடங்களில் தீபம் ஏற்ற தடை விதிக்க வேண்டும்.