இறைவனையோ, தேவர்களையோ வேண்டி செய்யும் யாகத்தில் அவர்களுக்கு தேவையான அவிர்பாகத்தை (உணவு) அக்னி மூலமாகக் கொடுக்கி றோம். அக்னி அவற்றை ஏற்றுக் கொண்டு, உரியவர்களிடம் சரியாகசேர்ப்பிக்கிறார் என்பது நம்பிக்கை. இவ்வாறு, தொடர்ந்து நெய் கொண்டு ய õகம் செய்ததால், ஒருசமயம் அக்னிதேவனுக்கு அஜீரணக் கோளாறு உண்டானது. இதனால் அவதிப்பட்ட அக்னிதேவன், தன் நோயைக் குணமாக்கும்படி மகா விஷ்ணுவிடம் வேண்டினான். அவனது வேண்டுதலை ஏற்ற சுவாமி, அக்னியை நீராக மாற்றினார். உடல் குளிர்ச்சியால் அக்னியின் நோய் குணமானது. அக்னி அந்த நீரின்வடிவில் ஒரு குளமாகத் தேங்கினான்.நீராக மாறிய அக்னிதேவனை உத்ராஞ்சல் மாநிலம், பத்ரிநாத்தில் காணலாம். நோய்உள்ளவர்கள் இந்த தீர்த்தத்தில் குளிக்கின்றனர். அக்னி உஷ்ணமாக இருந்து குளிர்ந்ததால் இந்த குளத்திற்கு, உஷ்ண குண்டம் என்று பெயர் ஏற்பட்டது.