ஒரே இடத்தில் இருந்தாலோ, எந்நேரமும் வேலை வேலை என திரிந்தாலோ மனிதனுக்கு அலுப்பும், சலிப்பும் உண்டாகும். இப்படி வாழ்வதை செக்குமாட்டு அனுபவம் என்பர். இதை விடுத்து, எங்காவது சுற்றுலா சென்று வந்தால்மனதில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக கோவில்களைக் காணும்போது, உடலுக்கு புத்துணர்ச்சியும், மனதில்அமைதியும் உண்டாகிறது.இதனாலேயே பல நோய்கள் குணமாகிவிடும். குடும்ப பிரச்னையிலி ருந்து விடுபட்டு நிம்மதியைத் தேடவும் திருத்தல தரிசனம் மாற்று மருந்தாக அமைகிறது. கோவில்களும் அவை அமைந்த இடங்களும் முனிவர்கள் பாதம் பட்டுபுனிதம் அடைந்துள்ளன. நாம் அங்கு சென்றால் புண்ணியம் பெருகுகிறது. குழந்தைகளுக்கு நம் தேசத்தின் பழைய வரலாறு, கலைத்திறன் ஆகிய வற்றைப் போதிக்கிறது. எனவே திருத் தலங்களுக்கு சென்று வாருங்கள்.