காளையார்கோவில் தூய ஆரோக்கிய அன்னை திருவிழா ஆரம்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2015 11:08
காளையார்கோவில் : ஆண்டிச்சிஊரணி தூய ஆரோக்கிய அன்னை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காளையார்கோவில் அருகேயுள்ள ஆண்டிச்சிஊரணி தூய ஆரோக்கிய அன்னை திருவிழாவை முன்னிட்டு புதிதாக அமைக்கப்பட்ட கொடி மரத்திற்கு பாதிரியார் பிரான்சிஸ்ஜெயபதி அர்ச்சிப்பு செய்தார். 6.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. கெபியிலிருந்து தூய ஆரோக்கிய அன்னை தேர்பவனி துவங்கி ஆலயத்திற்கு வந்தடைந்தது. தொடர்ந்து கூட்டு திருப்பலி , மறையுரை நடைபெற்றது. செப் 5,6ம் தேதி சிவகங்கை இளையோர் பணியகம் பாதிரியார் மரிய பாக்கியநாதன் குழுவினர் சார்பில் நற்செய்தி பெருவிழாம்,செப்.8ம் தேதி முதன்மைகுரு ஜோசப் லூர்துராஜா தலைமையில் அன்னை தேர்பவனி, ஆடம்பரகூட்டுத்திருப்பலி மற்றும் அன்னதானம் நடைபெறஉள்ளது.