மடத்துக்குளம்:ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, மடத்துக்குளம் அருகே சோழமாதேவியில் உள்ள நெசவாளர்கள் பூணுால் அணிந்து கோவிலில் வழிபட்டனர். மடத்துக்குளம் அருகே சோழமாதேவியில் வசிக்கும் நெசவாளர்கள், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, விநாயகர் கோவிலில் அமர்ந்து புதிய பூணுால் அணிந்ததோடு, சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தனர். இதுகுறித்து நெசவாளர்கள் கூறுகையில், பூணுால் அணிதல் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிகழ்வாகும். ஆண்டு தோறும் ஆவணி அவிட்டத்தில் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து, வழிபாடு செய்து புதிய பூணுால் அணிந்து வருகிறோம் என்றனர். சிறப்புபூஜை நடந்த பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.