Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி ராகவேந்திரர் ஜீவன் ... விழுப்புரம் ராகவேந்திரா கோவிலில் குத்து விளக்கு பூஜை விழுப்புரம் ராகவேந்திரா கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் குண்டு வைத்த 2 பேருக்கு கைது வாரன்ட்!
எழுத்தின் அளவு:
கோவிலில் குண்டு வைத்த 2 பேருக்கு கைது வாரன்ட்!

பதிவு செய்த நாள்

01 செப்
2015
11:09

பாங்காக்: தாய்லாந்தில், உலகப்புகழ் பெற்ற பிரம்மா கோவிலில், 20 உயிர்களை பலிவாங்கிய,  பயங்கர குண்டு வெடிப்புச் சமபவம் தொடர்பாக, மேலும் இருவருக்கு எதிராக கைது, ‘வாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தாய்லாந்தில், ஆக., 17ல், சாதோர்ன் பியர் நகரில், உலக புகழ் பெற்ற, பிரம்மா கோவிலில் பயங்கர குண்டு வெடித்தது; இதில், 20 பேர் பலியாயினர்; ஏராளமானோர் காயமடைந்தனர்.  இச்சம்பவம் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை, ஒரு வெளிநாட்டவரை, தாய்லாந்து போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இவ்வழக்கில், ஏற்கனவே இருவருக்கு எதிராக, கைது வாரன்ட் பிறப்பித்துள்ள போலீசார், நேற்று மேலும், இருவருக்கு எதிராக, இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளனர்.  இதுகுறித்து, காவல் துறை செய்தித் தொடர்பாளர் பிரவுத் தவோர்ன்ஸ்ரீ, பாங்காக்கில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தற்போது, கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களில் ஒருவர், வான்னா சான்சான்ட் என்ற பெண், 26. பாங்காக் நகரில், இப்பெண் தங்கியிருந்த குடியிருப்பில், அதிரடி சோதனை நடத்திய போலீசார், வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்களை கைப்பற்றி உள்ளனர். கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட மற்றொரு நபரின், நாடு உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தெரியவில்லை. இவ்விருவரின் உருவ வரைபடங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar