வத்திராயிருப்பு பேச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2015 12:09
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு வெள்ளாளர் வடக்குத்தெரு பேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் தமிழ்வேத மந்திரங்கள் முழங்க விமரிசையாக நடந்தது. இங்கு வெள்ளாளர் சமூகத்தினர் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட பேச்சியம்மன் கோயில் உள்ளது. இது முற்றிலும் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முதல்நாள் திருவிளக்கு பூஜையுடன் துவங்கி கோயிலை சுற்றிலும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் பூமிபூஜையும், விநாயகர் வழிபாடும் நடந்தது. பூரணகும்பம் தயார் செய்யப்பட்டு வேள்வி சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. முதல்கால வேள்வி பூஜைகள் நடந்தது. 2ம் நாள் வேள்வி பூஜையும், அதனை தொடர்ந்து கும்பாபிஷேக ம் நடந்தது. பூஜிக்கப்பட்ட கும்பநீரை சிவனடியார்கள் எடுத்துச் சென்று கோயிலை வலம் வந்து கோபுரத்திற்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகமும், புஷ்பஅலங்கார வழிபாடு , பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. நெய்வேலி கந்தசாமி சிவாச்சாரியார் தலைமையிலான சிவனடியார்கள் தமிழ்வேத மந்திரங்கள் முழங்க யாகபூஜைகளை நடத்தினர்.