காரைக்கால் : காரைக்கால் கோவில்பத்து திரவுபதியம்மன் கோவில் தீமிதித் திருவிழா நடந்தது.காரைக்கால் கோவில்பத்து திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 10ம் தேதி பூச்சொறிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் சிறப்பு தீபாராதனையும் நடந்தது. நேற்று முன்தினம் தீ மிதி திருவிழா நடந்தது. முன்னதாக கோவிலில் இருந்து புறப்பட்ட சக்தி கரகம் ஆற்றங்கரைக்கு சென்று பின் தீக்குழியில் இறங்கியது. அதனைப்பின் தொடர்ந்து பக்தர்கள் தீக்குழியில் இறங்கி அம்மனை வழிப்பட்டனர்.திரவுபதியம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதியுலா நடந்தது. விழாவில் வடக்கு தொகுதி திருமுருகன் எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.