கடலுார்: புதுப்பாளையம் திரவுபதியம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியொட்டி திருமஞ்சனம், ஆராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. வீதியுலாவின் போது, இரட்டை பிள்ளையார் கோவில், தரைகாத்த காளியம்மன் கோவில், கடைத் தெரு உட்பட 8 இடங்களில் உறியடி நிகழ்ச்சி நடந்தது. இளைஞர்கள் போட்டி போட்டு ஆர்வத்துடன் உறியடித்தனர்.