பெரிய பெருமாள் என்று ரங்கநாதரைச் சொல்வோம். ஆனால், பெரிய பெரிய பெருமாள் தெரியுமா? திருப்பதி சீனிவாசர் கல்யாணத்தில், விருந்துக்காக மலை போல், சாப்பாடு தயாரிக்கப்பட்டு இருந்தது. இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், மகரிஷிகள் சாப்பிடுவதற்காகக் காத்திருந்தனர். மணக்கோலத்தில் இருந்த சீனிவாசரிடம், பிரம்மா, இந்த பதார்த்தங்களை முதலில் யாருக்கு நிவேதனம் செய்வது எனத் தெரியவில்லையே! என்று கேட்டார். அதற்கு சீனிவாசர், அகோபிலம் நரசிம்மருக்கு முறைப்படி முதலில் படைத்த பின், சாப்பாட்டை அனைவருக்கும் பரிமாறுங்கள், என்றார். பத்மாவதி தாயாருடன் சென்று, அகோபிலம் நரசிம்மரை வழிபடவும் செய்தார். பிரம்மாண்ட புராணத்தில் வேங்கடாசல மகாத்மியத்தில் இச்செய்தி இடம்பெற்றுள்ளது. பெருமாளே வழிபட்டதால், அகோபிலம் நரசிம்மருக்கு பெரிய பெரிய பெருமாள் என்ற சிறப்பு பெயர் உண்டானது.