‘அபக்ருத்யம் என்ற வார்த்தை சமஸ்கிருதத்தில் உண்டு. இதற்கு‘செய்யத் தகாதவை என்று பொருள். கிருஷ்ணர் சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு செய்ய வேண்டியதாயிற்று. தன் திருவடியை எவனொருவன் சரண் அடைகிறானோ, அவனுக்கு ஒரு கஷ்டம் என்றால் பகவான் இப்படி செய்துவிடுவான். பாண்டவர்கள் கிருஷ்ணனே கதி எனஅவரையே சரணடைந்தனர். அவர்களது அன்புக்கு கட்டுப்பட்டு, அர்ஜுனனுக்கு தேரோட்டி ஆனான். அவர்கள் பக்கம் இருந்த நியாயத்தை பாதுகாக்க, கர்ணனிடம் இருந்த புண்ணியத்தை அபகரித்தான். போர்க்களத்தில் தேரை அழுத்தி அர்ஜுனனின் தலை தப்பிக்க காரணமாக இருந்தான். சகாதேவன் துரியோதனனுக்கு குறித்துக் கொடுத்த போர் நேரத்தை மாற்ற அமாவாசை திதியையே மாற்றினான். மனு ஸ்மிருதி என்ற நுõல், என்ன சொல்கிறது தெரியுமா? “ஒருவன் தனது குடும்பத்தைக் காப்பாற்ற செய்யத்தகாத காரியங்கள் நுõற்றுக்கணக்கில் செய்தாவது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், என்கிறது. அதற்காக, ஒரேயடியாக தப்புக் காரியங்களை நாம் செய்யக்கூடாது. குடும்பத்தை ஒருவன் பாதுகாக்க வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தவே இது சொல்லப்பட்டது. தப்பு செய்வது கூட நியாயமானதாக பாண்டவர்களைக் காக்க கிருஷ்ணர் செய்தது போல் எல்லாருக்கும் பலன் தருவதாக அமைய வேண்டும். சரி தானே!