திருவண்ணாமலை ஆண்ட மன்னன் பிரபுடதேவனுக்கு வேண்டியவனாய் இருந்தவன் சம்பந்தாண்டாள். முருக பக்தரான அருணகிரியார் மீது பாசம் கொண்ட மன்னனின் மனதை மாற்ற, அருணகிரி மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான், அவரை அழிக்க திட்டமிட்டு, அருணகிரிநாதரை கற்பகலோகத்துக்கு அனுப்பி பாரிஜாத மலர் பறித்து வரும்படி அரசனைத் தூண்டினான். அருணகிரியார் தன் உடலை கோபுர உச்சியில் போட்டு விட்டு, உயிரை ஒரு கிளியின் உடலில் புகுந்தி பறந்தார். அவர் அஷ்டமாசித்திகளை அறிந்தவர் என்பதால் இது சாத்தியமாயிற்று. உடலைப் பார்த்த சம்பந்தாண்டான் அருணகிரியின் உடலை எரிக்க ஏற்பாடு செய்தான். திரும்பி வந்த கிளி தன் உயிரை புகுந்த உடம்பின்றி, வருந்தியது. கிளி வடிவில் இருந்த அருணகிரியை வாழ்த்திய முருகன், நீ இதே வடிவில் என் தாயின் கையில் அமர்ந்து கொள்வாயாக என்றார். அதன்பிறகே அம்பிகையின் கைகளில் கிளி அமைக்கும் பழக்கம் உருவானது.