கீழக்கரை: உத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கையில் உள்ள மாப்பிள்ளை கண்ணன் கோயிலில் 25 வது ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு 504 விளக்கு பூஜை நடந்தது. மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயில் பூஜகர் சதீஷ் பட்டர் பூ ஜைகளை செய்தார். சக்தி ஸ்தோத்திரம், கண்ணனின் பெருமைகள் குறித்து பாடல்கள் பாடப்பட்டன . ஏற்பாடுகளை நல்லிருக்கை யாதவர் சங்க நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.