பதிவு செய்த நாள்
08
செப்
2015
12:09
வால்பாறை : வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்துவது, என, இந்து முன்னணி ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.வால்பாறை தாலுகா இந்து முன்னணி ஆலோசனைக்கூட்டம், தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் சபரீஸ்வரன், பொருளாளர் சேகர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் வரவேற்றார்.கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள கோவில்களில், 101 விநாயகர் சிலைகள் வரும், 20ம் தேதி பிரதிஷ்டை செய்வது என்றும், வரும், 19ம் தேதி சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 1,008 திருவிளக்கு பூஜை நடத்துவது, பல்வேறு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வரும், 20ம் தேதி காலை வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, ஊர்வலமாக சென்று, மாலையில் நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வால்பாறை நகர இந்துமுன்னணி நிர்வாகிகள் தம்புராஜ், ஆனந்தகுமார், லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.