ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சியில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி விழா நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி வரதராஜபெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அர்ச்சனை செய்யப்பட்டு, சாற்று முறை, சேவை ஆராதனை நடந்தது. மதியம் 3: 30 மணியளவில் இளைஞர்கள் உறியடித்து, வழுக்கு மரம் ஏறினர். பள்ளி மாணவர்கள் கிருஷ்ணர் வேடமிட்டு சென்றனர். பின்னர், சுவாமி வீதியுலா நடந்தது.