பதிவு செய்த நாள்
10
செப்
2015
12:09
மடத்துக்குளம்: மடத்துக்குளம் ஆடலுார் அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிேஷகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மடத்துக்குளம் வடக்கு ராஜவீதியில் அமைந்துள்ளது ஆடலுார் அம்மன் கோவில். நுாறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து பொதுமக்கள் வழிபாடு செய்கின்றனர். கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக்கோவில் பராமரிப்பு செய்யப்பட்டு, கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. அதன்பின், இந்த ஆண்டு கும்பாபிேஷகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, இதற்கான பணிகள் நடந்தன. கும்பாபிேஷக விழா, நேற்றுமுன்தினம் மாலை, 4:00 மணிக்கு, அமராவதி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதலுடன் தொடங்கியது. மாலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், முதற்கால வேள்வி, யாகசாலை பிரவேசம், மகா தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு இரண்டாம் கால வேள்ளி, மகாதீபாராதனை, கலசம் புறப்பாடும், காலை, 6:30 மணிக்கு ஆடலுார் அம்மன், சிவசக்தி விநாயகர் கோவில்களுக்கு கும்பாபிேஷகமும் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அபிேஷகம், ஆராதனை, அன்னதானமும், நடந்தன. விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்தனர்.