பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த புலவனுார் நவநீதகிருஷ்ண பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி காலை 9:00 மணிக்கு பகவத் பிரார்த்தனை, அக்னி பிரதிஷ்டை, ஹோமம், பூர்ணாகுதி பூஜை, மாலை 5:00 மணிக்கு புற்றுமண் எடுத்தல் நடந்தது. நேற்று முன்தினம் (8ம் தேதி) காலை 8:00 மணிக்கு மகா சாந்தி ஹோமம், சதுர்தச கலச அதிவாஸ்திரய விமானங்கள் ஹோமங்கள் மற்றும் மாலை 5:00 மணிக்கு திருமஞ்சனம், நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று (9ம் தேதி) காலை 4:30 மணிக்கு கோ பூஜை நடந்து, கடம் புறப்பாடாகி கோவில் உலா வந்து காலை 7:25 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு அர்ச்சுனன் – திரவுபதி திருக்கல்யாணம் இரவு பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது.