விழுப்புரம்: விழுப்புரம் ரயிலடி புனித ஆரோக்கிய மாதா சிற்றாலயத்தில் 26ம் ஆண்டு பெருவிழா நடந்தது. விழாவை யொட்டி ரயிலடி புனித ஆரோக்கியமாதா சிற்றாலயத்தில், கடந்த 8ம் தேதி மேல் முகப்பில் ஆரோக்கியமாதா புதிய சொரூபம் வைத்தல், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து, ஆண்டு பெருவிழாவை யொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. ஆலய தலைமை நிர்வாகி கர்லீஸ்ராஜ் தலைமை தாங்கினார். ரயில்வே மேலாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். ஓவிய ஆசிரியர் தீபு வரவேற்றார். கிறிஸ்து அரசர் ஆலய முன்னாள் பங்கு தந்தை பிலோமின்தாஸ், பங்கு தந்தை ல்பர்ட்பெலிக்ஸ், உதவி பங்கு தந்தைகள் சகாயநாதன், தெய்வநாயகம் ஆகியோர் திருப்பலியை நடத்தினர். ராஜ் நன்றி கூறினார்.