பதிவு செய்த நாள்
11
செப்
2015
11:09
புதுார்: மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் புரட்டாசி திருவிழா செப்., 16ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. செப்., 26ல் தெப்பத்திருவிழா நடக்கிறது. தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் புரட்டாசி உற்சவ விழா கொடியேற்றம், செப்.,16 காலை 6.45 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து பெருமாளுக்கு பல்வேறு ஆராதனைகள் நடக்கின்றன. இரவு அன்னவாகனத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். செப்.,17 முதல் தினமும் காலை, மாலை பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளுகிறார். செப்.,24 காலை தேரோட்டம், இரவு பூப்பல்லக்கு நடக்கிறது. செப்.,25 காலை தீர்த்தவாரி உற்சவம், இரவு பூச்சப்பரம் நடக்கிறது. செப்., 26 காலை 10:30 மணி, மாலை 6 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. செப்.,27 காலை உற்சவசாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. தெப்பத்திருவிழாவிற்காக கள்ளழகர் கோயில் நிர்வாகம், கள்ளந்திரி பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிறைத்துள்ளனர். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி (பொறுப்பு) செல்லதுரை செய்து வருகின்றனர்.