பதிவு செய்த நாள்
12
செப்
2015
11:09
பொதட்டூர்பேட்டை: பூதேவி உடனுறை பூவராக சுவாமி கோவில் பிரம்மோற்சவம், வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 26ம் தேதி கருட சேவை நடக்கிறது. பொதட்டூர்பேட்டை அடுத்த, மேல்பொதட்டூர் கிராமத்தில், பூதேவி உடனுறை பூவராக சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஐந்து நாள் பிரம்மோற்சவ திருவிழா, வரும் 24ம் தேதி காலை 9:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று மாலை 6:00 மணிக்கு, விஸ்வக்சேனர் மற்றும் உற்சவர் ராஜவாத்தியத்துடன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணிக்கு, சேஷ வாகனத்தில் உலா வரும் உற்சவர், மறுநாள் மாலை 4:00 மணிக்கு, கருட வாகனத்தில், எழுந்தருள்கிறார். இந்த உற்சவத்தில், செண்டை மேளம் மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 27ம் தேதி, அனுமந்த வாகனத்தில் சுவாமி எழுந்தருள்கிறார். 28ம் தேதி, சக்கர ஸ்தானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.