செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில், அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா, வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அ ங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு, அன்று காலை அங்காளம்மனுக்கு சி றப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு சிறப்பு இசை கச்சேரியும், வாண÷ வடிக்கையும் நடந்தது. இரவு 11:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர். அற ங்காவலர் புண்ணியமூர்த்தி, விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.