பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு இரு நாட்களாக நடந்த சங்கீத உற்சவம் நிறைவடைந்தது. நேற்றுமுன்தினம் கர்நாடக இசைக்கலைஞர் காஞ்சக்காடு ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில் இளம் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை 11.30 மணிக்கு செம்பை வித்யாபீடத்தின் 30வது ஆண்டு மாநாட்டை பிஜூ எம்.பி. துவக்கி வைத்தார். நீதிபதி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.வெள்ளிநேழி பாலகிருஷ்ணன் எழுதிய கானநந்தம் என்ற புத்தத்தை நீதிபதி வெளியிட இசைக் கலைஞர் பாபுராஜ் பெற்றுக் கொண்டார்.