மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி சன்னிதி பிரகாரத்தில் முக்குறுணி விநாயகர் சன்னிதி உள்ளது. தெற்கு நோக்கி வீற்றிருக்கும் இவருக்கு, விநாயகர் சதுர்த்திஅன்று 27 கிலோ அரிசியால் செய்யப்பட்ட ஒரே கொழுக்கட்டை நைவேத்யம் செய்யப்படும். இவரது சிலை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்காகத் தோண்டும்போது வைகை ஆற்றில் புதைந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சன்னிதி 16ம் நுõற்றாண்டில் அமைக்கப்பட்டதாகும். தொலைபேசி: 0452 2349868.