திருவள்ளூரில் உள்ள திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவிலில், 11 வித்தியாசமான வடிவங்களைக் கொண்ட விநாயகர் சன்னிதி உள்ளது. இதை விநாயகர் சபை என்பர்.இந்த விநாயகர்களை பிரதிஷ்டை செய்து, இழந்த செல்வங்களை திருமால் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. 11 விநாயகர்களும் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் காட்சி தருகின்றனர். மூன்று விநாயகர்கள் கிழக்கு பார்த்தும், இவர்களுக்கு பின்புறத்தில் இருபுறமும் சிறிய விநாயகர் களுடன் நடுவில் ஒரு பெரிய விநாயகரும், இடப்புறத்தில் ஐந்து விநாயகர்களும் இருக்கின்றனர். அருகில் கேது பகவான் (இந்த கிரகத்திற்குரிய தெய்வம் விநாயகர்) இருக்கிறார்.இருப்பிடம்: திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ., அலைபேசி: 98944 86890.