பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் குடவறைக் கோவிலில் புடைப்புச் சிற்பமாக எழுந்தருளியுள்ளார். இவரது துதிக்கை வலமாகச் சுழித்திருக்கும். கைகளில் ஆயுதங்கள் இல்லை. அர்த்த பத்மாசனத்தில் கால்கள் மடிந்திருக்க, அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவரது உயரம் 6 அடி. இவருக்கு இரண்டு கரங்கள் உண்டு. தலையில் கிரீடத்திற்குப் பதிலாக சடைமுடி உள்ளது. வலது கரத்தில் சிவலிங்கம் இருக்கிறது. 1600 ஆண்டுகள் பழமையான கோவில். விநாயகர் சதுர்த்தியன்று 27 கிலோ அரிசியில் (முக்குறுணி) செய்த மோதகம் படைக்கப்படும். இதை 10 பேர் சுமந்து வருவர். விநாயகர் பெயரிலேயே அமைந்த ஊர் இது. இருப்பிடம்: மதுரையில் இருந்து 70கி.மீ., தொலைபேசி: 04577 - 264 260, 264 240.