கடலில் கிடைக்கும் நத்தைக்கூடு, கிளிஞ்சல் மற்றும் மணலால் உருவான பிரளயம் காத்த விநாயகர், கும்பகோணம் அருகிலுள்ள திருப்புறம்பியம் சாட்சி நாதேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கிறார். இவருக்கு விநாயகர் சதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தேன் வெளிவராமல் உறிஞ்சப்பட்டு விடும். இருப்பிடம்: கும்பகோணம் - திருவையாறு சாலையில், புளியஞ்சேரி, இன்னம்பூர் வழியாக 10 கி.மீ.தொலைபேசி: 0435 - 245 9519, 245 9715.