ராஜகோபுரம், பிரகாரம் மற்றும் மண்டபங்களுடன் ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோவில் திருநெல்வேலி மேகலிங்கபுரத்தில் உள்ளது. கருவறையில், மூலவர் உச்சிஷ்ட விநாயகர், ஒரு பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்து காமரூபராக காட்சிஅளிக்கிறார். ஒரு பெண், குழந்தை பெற்று தாய்மையடைவதை பெருமையாகக் கருதுகிறாள். தாய்மைக்குப் பிறகு, அந்தக் குழந்தை நல்லவனாக, வல்லவனாக, பெற்றோருக்கு கீழ்ப்படிந்தவனாக நடக்க ஆசை கொள்கிறாள். விநாயகர், பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்திருப்பதை தரிசிப்பதன் மூலம், அசுர குணமுள்ள குழந்தைகள் பிறப்பது தடை செய்யப்படுகிறது என்பது ஐதீகமாகிறது. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலிலும் இத்தகைய அமைப்பில் ஒரு விநாயகர் சிலை இருக்கிறது.