பதிவு செய்த நாள்
16
செப்
2015
11:09
வேலுார்: திருவண்ணாமலையில், பவுர்ணமி நாளில், 10 லட்சம் பக்தர்கள், திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர். அந்நாளில், சுவாமியை தரிசனம் செய்ய, பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதை தவிர்த்து, அதிகமான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்வதற்கு வசதியாக, வி.ஐ.பி.,க்களுக்கான தரிசன நேரத்தை குறைத்து, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன் கூறியதாவது:வரும், 27ம் தேதி காலை, 11:35 மணி முதல், 28ம் தேதி காலை, 9:09 மணி வரை பவுர்ணமி உள்ளது. வழக்கமாக, பவுர்ணமி துவங்கியது முதல், முடியும் வரை, வி.ஐ.பி.,க்கள் மற்றும் பரிந்துரை கடிதம் கொண்டு வருபவர்கள், சிறப்பு வழியில், சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இனி, காலையில் நடை திறந்தது முதல், பிற்பகல், 3:00 மணி வரை மட்டுமே, அவர்கள் அனு மதிக்கப்படுவர்; அதன்பின் வருவோருக்கு அனுமதி கிடையாது. அதன்படி, 27ம் காலை முதல், பிற்பகல், 3:00 மணி வரை மட்டும், சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.