Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்: ... பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா: தீர்த்தவாரி உற்சவம்! பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் தங்க கொடிமரம் அமைப்பதற்கான தேக்கு மரம் பம்பை வந்தது!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் தங்க கொடிமரம் அமைப்பதற்கான தேக்கு மரம் பம்பை வந்தது!

பதிவு செய்த நாள்

18 செப்
2015
10:09

சபரிமலை: சபரிமலையில் அமைக்கப்பட உள்ள தங்க கொடிமரத்துக்கான தேக்குமரம் பக்தர்களின் சரணகோஷத்துடன் பவனியாக பம்பை எடுத்து வரப்பட்டது. சபரிமலையில் தற்போது உள்ள கொடி மரம் பழையதாகி விட்டதால் புதிய கொடிமரம் அமைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்தது. இரண்டு கோடி ரூபாய் செலவில் புதிய தங்க கொடி மரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இதற்கான தேக்குமரம் தரும்படிவனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. பல்வேறு வனப்பகுதி களில் தேக்குமரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.இறுதியில் கோந்நி அருகே வயக்கரையில் வனத்துறைக்கு சொந்தமான காட்டில் உள்ள ஒரு தேக்கு மரம் தேர்வு செய்யப்பட்டது. 1951-ல் நடவு செய்யப்பட்ட இந்த தேக்குமரம் 64 வயதுடையது. 14.3 மீட்டர் உயரமும், 135 செ.மீ. சுற்றளவும் கொண்ட இந்த மரத்தின் விலை 4.75 லட்சம் ரூபாய் ஆகும்.மரம் வெட்டுவதற்கு முன்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு புண்ணியாகம் தெளித்தார். பின்னர் வெட்டுவதற்கான ஆயுதங்களை பூஜித்து வழங்கினார். வடம் மற்றும் கிரேன் உதவியுடன் மரம் மண்ணில் விழாமலேயே லாரியில் ஏற்றப்பட்டது. பின்னர் பவனியாக புறப்பட்ட மரம் நேற்று மாலை பம்பை வந்து சேர்ந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar