பதிவு செய்த நாள்
18
செப்
2015
11:09
புளியந்தோப்பு: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை புளியந்தோப்பில், நான்கு லட்சம் ரூபாய் செலவில், வெள்ளியில் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர் சிலை, நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. சென்னை புளியந்தோப்பு, கோவிந்த சிங் தெருவில், பிரகாஷ் ராவ் காலனி உள்ளது. அங்கு, தமிழ் மக்கள் சேனா அமைப்பினர், பகுதிவாசிகள் பங்களிப்புடன், நான்கு லட்சம் ரூபாய் செலவில், ௫௦௦ கிராம் வெள்ளியில், விநாயகர் சிலை செய்துள்ளனர். அந்த விநாயகருக்கு ௧௬௩ கிராமில், தங்க முலாமும் பூசப்பட்டுள்ளது. மொத்தம், ௯ அங்குல உயரம் மற்றும் ௫ அங்குல அகலத்தில் உள்ள இந்த சிலை, நேற்று மாலை ௬:௦௦ மணிக்கு அந்த பகுதியில் உள்ள பந்தலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதே அமைப்பினர், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், ஒன்பது லட்சம் ரூபாய் செலவில், வெள்ளியில் விநாயகர் சிலை செய்து, அதை கடலில் கரைத்தனர். ஆனால், தற்போது அமைக்கப்பட்டுள்ள தங்க முலாம் விநாயகரை, கடலில் கரைக்கப் போவதில்லை என, அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.