பதிவு செய்த நாள்
18
செப்
2015
12:09
சென்னை: கிராமங்களில் அமைந்துள்ள, 10 ஆயிரம், சிறிய கோவில்களுக்கு, 2.44 கோடி ரூபாயில், பூஜை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் கிராம பகுதிகளில் அமைந்துள்ள, 10 ஆயிரம் சிறிய கோவில்களில், முறையான பூஜை செய்வதற்கு வசதியாக, பூஜை பொருட்கள் வழங்கப்படும் என, 2014 ஆக., 12ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தார். ஒவ்வொரு கோவிலுக்கும், 2,440 ரூபாய் மதிப்பில், பித்தளை தாம்பாளம், துாபக்கால், மணி, கார்த்திகை விளக்கு மற்றும் தொங்கு விளக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஐந்து கோவில் பூசாரிகளுக்கு, பூஜை பொருட்களை வழங்கி, முதல்வர் ஜெயலலிதா இதை துவக்கி வைத்தார்.