கம்மாபுரம்: கம்மாபுரம் மகா மாரியம்மன் ராஜ அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
கம்மாபுரம் மகா மாரியம்மன் கோவிலில், கடந்தாண்டு ஆகஸ்டு 31 ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. முதலாமாண்டு கும்பாபிஷேக நிறைவையொட்டி, 18.9.15 அன்று முன்தினம் காலை 8:30 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணியளவில் ராஜ அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். 18.9.15 காலை 8:00 மணிக்கு 108 அபிஷேக ஆராதனை நடந்தது.
ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவர் ராமசாமி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.