கோம்பை ராமக்கல் மெட்டு அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற திருமலை ராயப்பெருமாள் கோயில் உள்ளது. புரட்டாசியில் சனி வாரத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான முதல் புரட்டாசி சனிவார திருவிழா 19.9.15ல் துவங்குகிறது. ஆனந்த சயனத்தில் உள்ள சுயம்பு மூலவரை தரிசிக்க மாவட்டத்தின் பிற பகுதியிலிருந்தும், மத்திய கேரளாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்வர்.
வெளியூர் பக்தர்களின் வசதிக்காக கோம்பையிலிருந்து மலையடிவாரம் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. ராமக்கல்மெட்டு பகுதியிலிருந்து வனப்பாதை வழியாக கோயிலுக்கு நடந்து கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு மருத்துவம், குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. காலையில் ஊர் கோயிலிருந்து உற்சவர் ஊர்வலமாக மலைக்கோயிலுக்கு கொண்டு செல்லப்படுவார். மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை ஜமீன்தார் அப்பாஜிராஜ்குமார் மற்றும் தக்கார் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.