எக்கியர்குப்பம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2015 02:09
முருக்கேரி: முருக்கேரி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை, மரக்காணம் எக்கியர்குப்பம் கடற்கரையில் 19.9.15 விஜர்சனம் செய்கின்றனர்.
முருக்கேரி அடுத்த சிறுவாடி, நகர், பிரம்மதேசம், நல்லாளம், எண்டியூர், வடநெற்குணம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 18.9.15 முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து, பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
மூன்றாம் நாளான 19.9.15 விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஏற்றி, அந்தந்த பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்கின்றனர். மரக்காணம் அருகே உள்ள எக்கியர் குப்பத்தில் பைபர் போட் மூலம் வினாயகர் சிலையை எடுத்து சென்று கடலில் விஜர்சனம் செய்கின்றனர். ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.