சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொணடாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சங்கராபுரம் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில், மூலவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் சந்தன காப்பு சாத்தப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
சின்னசேலம்: சின்னசேலம் நகர பகுதியில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் அனைத்து விநாயகர் கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடந்தது. அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. ரயிலடி சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அனைத்து கோவில்களிலும் பல்வேறு விதமான அலங்காரத்துடன் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு நிகழ்ச்சி நடந்தது.
ரிஷிவந்தியம்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ரிஷிவந்தியத்தில் பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ரிஷிவந்தியம் பகுதியில் 8 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிருஷ்டை செய்து, பொதுமக்கள் வழிபாடு செய்தனர். ரிஷிவந்தியம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட 18 கிராமங்களில், 43 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.