ஊத்துக்கோட்டை: வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி, உற்சவர் கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டை சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி, நேற்று முன்தினம் காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து உற்சவர், கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், பென்னலுார்பேட்டை, பெரியபாளையம், ஆரணி, வெங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.