கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் திருவரசன் பிள்ளைத் தோட்டத்தில் இளைஞர் மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு இணை செயலர் துரை பிரேம்குமார், விநாயகர் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். மேலும், அவர், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பரதநாட்டியம் ஆடிய ஏஞ்சல், பார்த்திமா, பத்மஜா ஆகியோருக்கு பரிசு வழ ங்கினார். மூன்று நாள் சிறப்பு பூஜைக்கு பிறகு கடந்த 19ம் தேதி விநாயகர் சிலை தேவனாம்பட்டினத்தில் விஜர்சனம் செய்யப்பட்டது.