பதிவு செய்த நாள்
24
செப்
2015
10:09
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி விஷ்ணுதுர்க்கை அம்மன் கோவிலில் மகா மங்கள சண்டியாக விழா நடந்தது. கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் <உள்ள விஷ்ணுதுர்க்கை அம்மன் கோவிலில் கடந்த 21ம் தேதி மகா மங்கள சண்டியாக விழா துவங்கியது. இதையொட்டி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மகா சங்கல்பம், புன்யாவஜனம், பூர்ணாகுதி நடந்தது. இரண்டாம் நாள் காலையில் கோ-பூஜை, கணபதி சண்முக, நவக்கிரக ஹோமங்கள் நடந்தது. அன்று மாலை விக்னேஷ்வர பூஜை, வேத பாராயணம், லட்சுமிகணபதி, சுதர்சன ஹோமங்கள் நடத்தி, 64 பைரவர்ளுக்கு பூஜைகள் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு கோ, கஜ, அஸ்வ, சுமங்கலி, பிரம்மச்சாரி, வடுக, கன்னிகா பூஜைகளுடன், மகா மங்கள சண்டி ஹோமங்கள் நடந்தது. அதில் வஸ்த்ர, மங்கள திவ்ய, வசோர்தாரா ஹோமங்களும், மகா பூர்ணாகுதி, அம்பாளுக்கு கட அபிஷேகமும் நடந்தது. வைபவங்களை கல்யாணபுரம் பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் மற்றும் திருவையாறு சீனிவாசன் குழுவினர் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வெல்கடாசலம், கணேசன், மணி, கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ், கோவிந்தன், அருண், வடிவேலு ஆகியோர் செய்திருந்தனர்.