ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள வெட்டுக் குளம் கொல்லாருடைய அய்யனார் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு, கிராமத்தார்கள் சார்பில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.முன்னதாக அய்யனா ருக்கு சிறப்பு அபிஷேக ஆதாரனைகள் செய்யப் பட்டு, கோயிலில் இருந்து அலங்கரிக்கபட்ட மண் குதிரைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. அவற்றை ஊர் நடுவில் உள்ள அம்மன் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். விழாவில் ஊராட்சி தலைவர் வாசுதேவன், அ.தி.மு.க., கிளை செயலாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.